
இரண்டு ஜோடியுடன் சந்தானம் ஆர்.கண்ணன் இயக்கும் ‘பிஸ்கோத்’.
மசாலா ஃபிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய படம் 'பிஸ்கோத்'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்பொழுது தான் இப்படத்திற்கு பெயர் சூட்டியுள்ளார்கள்.
இதில் மூன்று தோற்றங்களில் சந்தானம் நடித்து அசத்தியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு இரண்டு ஜோடிகள். சந்தானத்தின் வெற்றி படமான 'A1' நாயகி தாரா அலிஷா பெர்ரி மீண்டும் இவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா அறிமுகமாகிறார். மேலும், ஆனந்த்ராஜ், 'மொட்டை' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன், சிவசங்கர், 'லொள்ளு சபா' மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.400வது படமாக சவுகார்ஜானகி நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் இடைவிடாமல் நடைபெற்று முடிவடைந்தது. சுமார் ஒன்றரை கோடி செலவில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரண்மனை அரங்கு போடப்பட்டு 20 நாட்கள் படமாக்கப்பட்டது.
தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடலான ...