
கேப்டன் பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, சமீபத்தில் இவரின் வில்லன் நடிப்பில் வெளிவந்த சாமி 2 இவருக்கு மிக பெரிய நல்ல பெயரை வாங்கி கொடுத்தது தற்போது ரஜினியின் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.
பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைட்மேன், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
இவர், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய நீலம் படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகவில்லை. ...