
`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்த...