கலை சேவைக்கு பின் மக்கள் சேவைக்காக தேர்தலில் களமிறங்கும் நட்சத்திரங்கள்
வழக்கமாக தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் அவ்வகையில் இந்த தேர்தலிலும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர்.
நடிகைகள் சுமலதா, நவ்நீத் கவுர், ஜெயப்பிரதா ஆகியோர் இந்த தேர்தலில் முறையே காங்கிரஸ், யுவா ஸ்வாபிமான் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகளில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த நடிகையும் மறைந்த கன்னட நடிகருமான அம்பரீஷின் மனைவியுமான நடிகை சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால் இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மகனை அந்த தொகுதியில் இறக்கியவர், அதே தொகுதியில், சுயேச்சையாக தான் நிற்கவிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், த...