
விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது.
இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன்.
இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திருமதி.R.தமிழ்செல்வி போன்ற பலரும் பங்குகொண்டு சிறப்பித்தனர். திரைவிழா, பொழுதுபோக்கு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போ...