
மிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்
இந்த நாட்களில், 'டீசர்' என்பது ஒரு படத்தின் பிரதான அடையாளமாக மாறி விட்டது. அதனால் அதை மிகச் சிறந்த முறையில் கொடுக்க கடின உழைப்பும், மிகப்பெரிய முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவில் ஒரு படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் பார்வையாளர்கள் என்ற முக்கிய காரணிகளும் தற்போது இருப்பதால், 'முதல் தோற்றத்திலேயே அனைவரையும் ஈர்க்க வேண்டும்" என்ற ஒரு கோட்பாடு உள்ளது. 45 நொடிகள் ஓடும் இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசர் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, உடனடியாக நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் கேஆர் சந்துரு கூறும்போது, "முதலில், எங்கள் டீசரை அறிமுகப்படுத்த முழு மனதுடன் ஒப்புக் கொண்ட சூர்யா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆன...