Tuesday, June 18
Shadow

Tag: #boxer #arunvijay #vivek #leon

பிரபல நாயகியின் தங்கை அருண் விஜயின் பாக்சர் படத்தில் இணைந்தார்

பிரபல நாயகியின் தங்கை அருண் விஜயின் பாக்சர் படத்தில் இணைந்தார்

Latest News, Top Highlights
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார் மேலும் இப்படத்தில் நிக்கி கல்ரானின் தங்கை சஞ்சனா கல்ரானி இணைத்துள்ளார் . இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டூடியோஸில் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருப்பதாக தயாரிப்புக் குழ...
பாக்சர் படத்துக்காக கடுமையான பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

பாக்சர் படத்துக்காக கடுமையான பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

Latest News, Top Highlights
இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், கடுமையாக உழைப்பதில் தவிர்க்க முடியாத ஆர்வம் உடையவர் நடிகர் அருண் விஜய். "பாக்ஸர்" படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக அவர் செய்யும் தீவிர பயிற்சிகளின் வீடியோ ஏதாவது வெளியாகுமா என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். குறிப்பாக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான லின் பாங்கில் பயிற்சி பெறுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டி இருக்கிறது. படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, "அருண் விஜய் சார் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் சார் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும்...

2019 மார்ச் மாதம் தொடங்கும் அருண் விஜயின் பாக்ஸர் படப்பிடிப்பு

Latest News, Top Highlights
நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை மையப்படுத்தி...

அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் பாக்ஸர் அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்' நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக `தடம்' ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இதுதவிர அருண் விஜய் `வா டீல்', `சாஹோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் `அக்னிச் சிறகுகள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. `பாக்ஸர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார். அருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு லியோன் இசையமைக்க, மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.ம...