
கனடா நாட்டின் இசை தூதராக இசையமைப்பாளர் இமான்
இந்திய இசை கலைஞர்கள் தங்கள் பயணத்தில் பல்வேறு ரசிகர்களையும் ரசிப்புத்தன்மைகளையும் கடந்து வருகின்றனர். இது அவர்களுக்கு தங்கள் கலையை பட்டை தீட்டவும், உலகத்தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
தற்கால இசை விரும்பிகள் அனைவரும் கலைஞர்களிடமிருந்து தனித்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் டி. இமான் தனது 16 வருட இசை பயணத்தில் பல புதுமுகங்களையும் திறமையாளர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிராமிய இசையை திரை இசையோடு இணைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
தற்போது இசையமைப்பாளர் டி. இமான், கனடா அரசின் டோரொண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதுவராக நியமாகிப்பட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்காக அவர் இசையமைத்த " எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" பாடல் தமிழ் கீதமாக அங்கீகரிக்கபட்ட...