டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்
தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அரசியலில் தீவிரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தும் இதுகுறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில்
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று கருத்து த...