
கோகுலம் கைபற்றிய சென்னை ராக்கர்ஸ் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.
சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும் என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி.
கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையஅடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் ...