
சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு
சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் என்றாலே நமக்கு உடனே நியாபத்துக்கு வருவது நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான். அவர்கள் இருவருமே இந்த ஆண்டு நடைபெறும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணு விஷால். அதேபோல் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் விக்ராந்த். இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இருவருக்குமே சினிமாவை விட கிரிக்கெட்தான் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள்.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக காட்சியளிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு இருவரமே பங்கேற்கவில்லை என்று த...