
பிரபல பாடகர் சிலோன் மனோகர் காலமானார்
இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார்.
சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார்.
சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்....