Monday, May 12
Shadow

Tag: #chaiko #udhayanithi #mishkin #pcsriram #adhithirao #nithyamenon #ram

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

Latest News, Top Highlights
இயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது. இயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, "வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும...