Monday, April 21
Shadow

Tag: #Charlie

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

Latest News, Top Highlights
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்....