Monday, April 21
Shadow

Tag: #cheethan

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே தான் விரும்புவதாக நடிகர் சேத்தன் கூறுகிறார்.

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே தான் விரும்புவதாக நடிகர் சேத்தன் கூறுகிறார்.

Latest News, Top Highlights
அடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன். 'மர்மதேசம் 'தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது . சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.'தாம் தூம்' படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன். இதோ அவரே பேசுகிறார். "நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் 'தாம் தூம்' . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் ...