Tuesday, March 18
Shadow

Tag: #Chennai2Singapore

சென்னை 2 சிங்கப்பூர் ரசிகர்கள் நல்ல இசைப்பயணத்தை கொடுக்கும்: ஜிப்ரான்

சென்னை 2 சிங்கப்பூர் ரசிகர்கள் நல்ல இசைப்பயணத்தை கொடுக்கும்: ஜிப்ரான்

Latest News
ஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. அவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் 'அறம்', தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை. "எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்க...