
நாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்? வித்தியாசப் பயணத்தில் ’சென்னை பழனி மார்ஸ்’
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ.
இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக்குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.
நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.
நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான்.
அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் ச...