
“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் இனிதே துவங்கியது !
குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் ...