நடிகர் சின்னி ஜெயந்த் பிறந்த தினம் பதிவு
சென்னையில் பிறந்த இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.
தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார். இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
சென்னை சென்னை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருந்த புதுப்பேட்டை தோட்டத்தெரு பிறந்த இவருடன் பிறந்தவங்க ஆறு பேர். கடைக்குட்டியான இவரது வீட்டின் மாடியில் அவர்களது மாமாவும் குடியிருந்தார். அவரது மாமா மியூசிக் அகாடமியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவரது தாய்க்கும் கர்நாடக இசை நன்றாக தெரியும். இவர் சினிமாவில் நடிகன் ஆனதுக்குப் பிறகு என் ப...