
மீண்டும் நடிக்க வருகிறார் இதயத்துக்கு இதமான சித்ரா
‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ‘ராஜபார்வை’ படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘மதுமதி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 300 படங்களில் நடித்திருக்கிறார்.
இதிலெல்லாம் இவருக்குக் கிடைக்காத விளம்பரம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்தபோது இவருக்குக் கிடைத்தது. இதன் பின்னர் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார்.
‘பொண்டாட்டி ராஜ்யம்’ படத்தில் ‘பாரதி ஒரு நிமிஷம் உள்ள வாயேன்’ என்று தன் தங்கை ரஞ்சிதாவிடம் இவர் பேசும் வசனம் பிரபலமானது. இதேபோல் ‘சின்னவர்’ படத்தில் சந்திரசேகருக்கு ஜோடியாக நடித்த இவரது கேரக்டரும் ர...