
தட்டிக் கொடுத்த விக்ரம்: நெகிழும் நடிகர் மாஸ் ரவி
விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி.
ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.
தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, "எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். டி.வி.யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.
பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த "ஜிஞ்ஜினுக்கான்" பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், ...