
சோ மரணம்.! முதல் ஆட்களாக சென்று பார்த்த ரஜினி,அஜித்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் , பிரபல நடிகர், அரசியல் விமர்சகருமான “சோ” ராமசாமி திடீர் மரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு இருந்தார்.
இந்நிலையில் சோவுக்கு மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அரசியலில் முழுமையாக தன்னை இணைத்துக்கொள்ளாத ஒரு அரசியல் சாணக்கியர் சோ. நகைச்சுவை பாணியில் அரசியல் விமர்சனங்களை செய்து புரட்சி செய்த மூத்த பத்திரிக்கையாளர் சோ. பல ஆட்சி/கூட்டணி மாற்றங்களுக்கு காரணக்கர்த்தா.
இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடத்தை ...