சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!
நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு அகிரா டெக்னாலஜிஸ் என்னும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம் நடத்தும் செந்தில் நாயகம், கணபதி, மற்றும் மார்ஸ் ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை காண முயற்சித்தார்.
ஒராண்டில் ஒர் நிகரில்லா தீர்வுடன் வந்துவிட்டது. ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ரசிகர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே பல தகவல்கள் அளிக்கவும் நாம் கேட்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா சார்ந்த குறிப்பிட்ட சந்தேகங்களுக்கும் விடையளிக்க...