
துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.
திட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி இருக்கிறார்கள். ஆதி நடிப்பில் உருவாகும் "க்ளாப்" முற்றிலும் மாறுபட்ட செய்தியை கொண்டு இருக்கிறது..
பிக் பிரிண்ட் pictures சார்பில் I B கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி நடிப்பில், பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்,உருவாகும் "க்ளாப்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
" எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே , துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா , மற்றும்...