Wednesday, April 30
Shadow

Tag: #CoCo

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. இந்த வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 8-ம் தேதி வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன்...