இந்தியாவிற்கு இது மிகவும் அவசியம் – நடிகை காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் காண்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடிகை சன்னி லியோன், ராக்கி சாவந்த் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் காண்டம் விளம்பரங்களில் நடித்தும், அதுகுறித்து அடிக்கடி புகார்கள் தெரிவித்தும் வந்தனர். அதேநேரத்தில் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வது தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்ப முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது.
அதில் தொலைக்காட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால், இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்ப வேண்டும். அதை பார்த்தாவது சிலர...