
புத்தாண்டுக்கு இசை விருந்தளிக்கும் `டிக் டிக் டிக்’ படக்குழு
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர்.
டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்...