
உலக அளவில் இரண்டாயிரம் கோடி வசூல் சாதனை செய்த அமீர்கான்யின் தங்கல்
ஆமிர்கான் நடிப்பில் ஃபோகட் சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'தங்கல்'. 2016 டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த மே மாதம் 5-ஆம் தேதி 'தங்கல்' சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
"ஒரு இந்திய திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றி இது. இது ஒரு மைல்கல். 'தங்கல்' ஒரு சூப்பர் ஹிட் இந்தியப் படமாக உருவாகியுள்ளது" என சீனாவில் இந்தியப் படங்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்ராடிஜிக் அலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
2 வாரங்களுக்கு மேல் சீன பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருந்த 'தங்கல்', கடந்த வாரம் 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்துக்கு அந்த இடத்தை விட்டுத் தந்தது. ஆனால் இன்னும் 9000 திரைகளில் 'தங்கல்' தொடர்ந்து வெற்றிக...