பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேவந்தவுடன் காதலியை கரம் பிடித்த டேனி
ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ள... ' என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர், நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் எலிமினேட் ஆகி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல் கதையைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று, டேனி இன்ஸ்டாகிராம் பதிவில், தான் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில், ‘உங்கள் அனைவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இதுதான் என் அழகு தேவதை குட்டு. என் மனைவி. நாங்கள் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். குடும்பச் சிக்கலால் இத்தனை நாள் எங்களின் காதல்குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன். இன்று முதல் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக எங்களி...