
கனா படம் மூலம் அறிமுகமான தர்ஷன் நாயகனாக அடுத்த படம்
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த 'கனா' படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன். இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார். இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். 'ப்ரொடக்ஷன் நம்பர் 1' என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திசை...