
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே
விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி, நளதமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இயக்குனர் அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் திவ்ய தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடித்தது குறித்து தற்போது திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்....