
பத்மாவத் திரைப்படத்திற்கு வந்த மற்றொரு சோதனை!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே முக்கிய பாத்திரத்தில் நடித்த ‘பத்மாவத்’ திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது. ஒரு பக்கம் இந்த படம் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்று வசூல் குவித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் இந்த படத்துக்கு எதிர்ப்பு நிலவி வருவதால் அம்மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கிய படக்குழுவினருக்கும் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பத்மாவத்’ படத்தை பார்த்த மலேசியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேசியாவில் வெளியிடுவதாக இருந்தால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் மனது புண்படுவதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருப்பதாக நினைத்து இப்படத்துக்கு மலேசியாவில் தடை விதித்துள்ளது.
இதனால் மலேசியாவில் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்...