“தெய்வ மச்சான்” – திரை விமர்சனம்! (Rank 3/5)
எப்படி இருக்கிறது விமல் நடித்துள்ள "தெய்வ மச்சான்" - திரை விமர்சனம்!
நடிகர் விமல் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சில பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தெய்வ மச்சான் படத்துடன் வந்துள்ளார். இப்படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். கதைப்படி விமல் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். அப்பா பாண்டியராஜன், அண்ணன், தங்கை அனிதா உடன் வாழ்ந்து வருகிறார். இவரது நண்பர் பால சரவணன். தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார் ஆனால் எந்த வரனும் செட் ஆகவில்லை. இந்த நிலையில் ஆடுகள் நரேன் தனது வயதான தம்பிக்கு பொண்ணு கேட்டு வருகிறார். ஆனால் விமலும் பாலசரவணனும் சேர்ந்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகின்றனர். இதனால் இவர்களை பழிவாங்க நினைக்கிறார் ஆடுகளம் நரேன். இது ஒருபுறம் இருக்க விமலுக்கு சிறுவயதில் இருந்தே க...
