
நடிகை தேவயானியின் தந்தை காலமானார்
1990-களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெய்தேவ் பேட்டர் பெட். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் நடிகர் நகுல். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெய்தேவ் (73) இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இவரது உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர் பலரும் இவரது உடலக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது....