
படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)
நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார்.
அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார்.
ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேய...