
சினம் படத்தில் விலைமாதுவாக நடிக்கும் தன்ஷிகா
கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா தற்போது ஒரு படத்தில் விலை மாதுவாக நடிக்கவிருக்கிறாராம். அந்த படம் குறித்த தகவல்களை கீழே விரிவாக பார்ப்போம்.தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கதாபாத்திரங்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் விலைமாது வேடம்.
ஆனாலும் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த கதாபாத்திரத்தை நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா பொன்வண்ணன், சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக எடுத்து நடித்து தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் சினிமாவில் இல்லாமல் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்...