
தனுஷை ஓரம் கட்டிய ஜி. வி. பிரகாஷ் எப்படி தெரியுமா ?
கடந்த ஆண்டு மலையாளத்தில் பிரேமம் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது போல, இந்த அண்டு தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தென்னிந்தியா முழுவதும் பேச வைத்துள்ளது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர், அறிமுக ஹீரோ மற்றும் அறிமுக நாயகி என்று அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் படம் மாபெரும் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இந்தி மற்றும் தமிழ் ரீமேக் உரிமையை பெற பல நடிகர்ள் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ரீமேக்கை பெற தனுஷ், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை, என்று அர்ஜுன் ரெட்டி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்த...