
தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா
அச்சம் என்பது மடமையடா வெற்றி படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.இதில் முதல் முறையாக தனுஷ்வுடன் சேருகிறார் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
டிசம்பருக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விடும் எனத் தெரிகிறது. அதன் பிறகு டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்கும் என்கிறார்கள். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அது கவுதம் மேனனின் வழக்கமான பாணியான ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்து வெளியாகி இருக்கிறது. தனுஷ் தாடியுடனும், தாடி இல்லாமலும் இரண்டு கெட்அப்களில் காணப்படுகிறார். படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு செ...