![காலா படத்தால் மிக பெரிய லாபம் தனுஷ் மற்றும் குடும்பம் மகிழ்ச்சி](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/03/Kaala.jpg)
காலா படத்தால் மிக பெரிய லாபம் தனுஷ் மற்றும் குடும்பம் மகிழ்ச்சி
நடிகர் ரஜினியின் காலா படம், அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்காகவே, நடிகர் ரஜினி, இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்தை 75 கோடி ரூபாய் பொருட் செலவில், நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், காலா படத்தின் டீசர் ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தை, 125 கோடி ரூபாய் கொடுத்து, விநியோக உரிமையை வாங்கியுள்ளது லைகா நிறுவனம்.
இதையடுத்து, ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே படத்தில், பெரிய அளவில் ரிஸ்க் இல்லாமல், 50 கோடி ரூபாயை சம்பாதித்திருப்பதாலேயே, இந்த சந்தோஷம் என் கின்றனர் சினிமா வட்டாரங்களில்....