
மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் தனுஷ்
நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆனார். ப. பாண்டி படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்தார்.
தொடை தெரிய வேட்டிக் கட்டி நடித்து வந்த ராஜ்கிரணை ஜீன்ஸ், டி சர்ட் போட்டு மாடர்னாக காட்டியிருந்தார் தனுஷ்.
ப. பாண்டி படத்தை பார்த்தால் அது தனுஷ் இயக்கிய முதல் படம் என்றே கூற முடியாத அளவுக்கு நன்றாக இருந்தது. ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது எல்லாம் பார்க்கும்படியான படமாக ப. பாண்டி அமைந்துவிட்டது.
அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ். ப. பாண்டி படத்தில் பிளாஷ்பேக்கில் மட்டுமே வந்த தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது
தனுஷின் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ப. பாண்டியை போன்றே இந்த படமும் நிச்சியம் ஹி...