
நிவின் பாலி ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவ்வப்போது தெலுங்கு, மலையாள சினிமாவிலும் தலைகாட்டி வருகிறார்.
அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா தற்போது, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெய் சிம்ஹா, சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன், தம்பியும், நடிகருமான தயன் சீனிவாசன் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
‘லவ் ஆக்சன் ட்ராமா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் நிவின் பாலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இரு...