
தில்லுக்கு துட்டு 2 – திரைவிமர்சனம் (காமெடி தர்பார்) Rank 4/5
2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார்.
சந்தானம் ஹீரோவாக ஜெயித்தே தீர வேண்டும் என்று போராடி வருகின்றார். அவரின் போராட்டத்திற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி தான். அதை தொடர்ந்து அவர் நடித்த படம் பெரிய தோல்வியை சந்திக்க, தற்போது மீண்டும் தன் ஹிட் கூட்டணியுடன் இணைந்து தில்லுக்கு துட்டு-2-வை கொடுத்துள்ளார்,இதில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றியை இந்த படம் தரும் என்பதில் ஐயமில்லை இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்.
சந்தானம் தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் எப்போதும் குடித்து கலாட்டா செய்து வருகிறார். அந்த ஏரியாவி...