
பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கேட்க இதுதான் காரணமா?
விஜய் டிவி புகழ் டிடி சமீபத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் டிடி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் ஆன 2 வாரத்திலேயே தாலியை கழட்டி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக, சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை வாழ்த்துவதற்குப் பதிலாக இன்னும் எத்தனை மாசத்திற்கு இது நீடிக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகிவிட்டது. அதோடு, தனியார் தொலைக்காட்சி மூலமாக திருமணம் செய்து கொள்ளும் பலரும் தற்போது விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினியின் விவாகரத...