
வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி இன்னமும் தேர்வாகவில்லை. பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் துவங்கியது.
மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருந்த நிலையில், படக்குழு தற்போது சென்னை விரைந்துள்ளது.
மீண்டும் சென்னை திரும்புவதாக படத்தின் நாயகன் துருவ் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நேபாளத்தில் நடத்தப்பட்டு வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில...