
இயக்குனர் விஜய் இயக்கத்தில் மாதவன் சாய் பல்லவி இணையும் புதிய படம்
ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வனமகன்'. விஜய் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'வனமகன்' படத்தைத் தொடர்ந்து, மாதவன் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் விஜய். இது 'சார்லி' மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
'சார்லி' ரீமேக் தள்ளிப் போவதால் அதற்கு முன்பாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார். குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் சிறு முதலீட்டில் இப்படம் உருவாகவுள்ளது. முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகவுள்ள இதில் நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.
'சார்லி' ...