
நடிகை திவ்யதர்சினி பிறந்த தினம்
திவ்யதர்சினி (Divyadarshini) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.
திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி...