
அர்ஜூன் பட நாயகி இரண்டாவது திருமணம்
மலையாள நடிகை திவ்யா உன்னி முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழில் வேதம், பாளைத்து அம்மன் படங்களின் மூலம் பிரபலமானவர் திவ்யா உன்னி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2002ம் ஆண்டு மருத்துவர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார்.
இவர்களுக்கு அர்ஜூன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் திவ்யா உன்னி நடனப் பள்ளி நடத்தியது அவரது கணவர் சுதீர் சேகரனுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த விவாகரத்திற்குப் பிறகு சிறிது காலம் கேரளாவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் மீண்டும் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அமெரிக்காவுக்...