
துல்கர் சல்மான் கோவம் அடங்குமா ?
வாய் மூடி பேசவும், நடிகையர் திலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் துல்கர் சல்மான். சமீபத்தில் இவர் தனது இணைய தள பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டிருந்தார். அதில்,’விமான நிலையத்திற்கு உள்ளே நுழையும்போது மனக் கசப்பான அனுபவத்தைத்தான் உணர முடிகிறது. அங்கிருக்கும் பணியாளர்கள் சிலர் பயணிகளிடம் நடந்துகொள்ளும் விதமே இதற்கு காரணம்.
விமானத்தில் இதுபோன்ற கசப்பான அனுபவத்துடன் பயணிக்க வேண்டுமா? இதுபோன்று அவமானம் எனக்கு ஏற்படவில்லை. சக பயணி ஒருவருக்கு ஏற்பட்டது. இதேபோன்ற ஒரு கசப்பான அனுபவத்தை நான் சிறுவயதில் எனது பெற்றோருடன் விமான நிலையத்துக்கு சென்றபோது அனுபவித்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
துல்கரின் டுவிட்டர் மெசேஜை கண்ட குறிப்பிட்ட விமான நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், ‘உங்களுடைய அனுபவம் குறித்த ஆதங்கத்தை கவனத்துடன் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களது விவரங்களை எங்க...