
காதல் மன்னன் துல்கர் சல்மானின் ஜோடியாக 4 இளம் நாயகிகள்
மலையாள சூப்பர் ஸ்டார் மமுட்டி மகான் துல்கர் சல்மான் தமிழில் தற்போது மிகவும் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார் ஆம் முதலில் ஒன்று ரெண்டு படங்கள் நடித்த இவர் தற்போது முழு நேர தமிழ் நடிகராக மாறியுள்ளார்.
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் 'கண்ணு கண்ணும் கொள்ளையடித்தால்'. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இன்னொரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர். துல்கருக்கு ஜோடியாக 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்! ஒருவர் நிவேதா பெதுராஜ், இன்னொருவர் 'அர்ஜுன் ரெட்டி' படப் புகழ் ஷாலினி பாண்டே! மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கான தேர்வு இப்போது நடந்து வருகிறது.
தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை கார்த்திக் என்ற புதியவர் இயக்குகிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய...