
மிகுந்த மனநிறைவுடன் உற்சாகத்தில் ‘எம்பிரான்’ படக்குழு
'எம்பிரான்' படக்குழு மிகுந்த மனநிறைவுடன் மிக உற்சாகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் பி. பஞ்சவர்ணம் மற்றும் வி சுமலதா ஆகியோர், மிகச்சிறப்பான ட்ரைலரால் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் வி சுமலதா கூறும்போது, "ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 'குருட்டுத்தனமான வாய்ப்பு' முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரை காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானை பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் டிரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விட சிறப்பா...